Tuesday 20 September 2011

எங்கேயும் எப்போதும்

எங்கேயும் எப்போதும் - எளிமையான விருந்து. விருந்தினர் யார், அவர்களுக்கு எப்படி பரிமார வேண்டும், முன்னமே பலமுறை பரிமாரப்பட்டு சளிப்புாட்டிய வகைகள் என்னென்ன, தமது சக்தி (பட்ஜேட்) என்ன... இந்த கேள்விகளுக்குகான பதில்கள்தான் எங்கேயும் எப்போதும்.

மனமார்ந்த பாராட்டுக்கள்

1. ஜெய்க்கு காதில் இரத்தம் வந்ததை இயக்குனர் ஷாட்டாக மட்டும் போட்டு, பிறகு அஞ்சலி சொல்வதன் முலம் கதில் ரத்தம் வந்ததன் விபரீதத்தை மக்கள் தாங்களாக உணர்ந்து கொள்வது. அதன் மூலம் ஜெய்யின் இறப்பில் டெம்போவையும், எதார்த்தத்தையும், கையாண்ட விதம் மிக அருமை..

2. பேருந்துகள் மோதும் போது உள்ளே மக்கள் பயங்கரமாக மோதிக் கொள்வதின் துள்ளிய (details) பதிவுகள். இது காட்சியாக்கப்பட்ட விதம் தமிழ் சினிமாவின் விபத்து பற்றிய தனமான விழிப்புணர்வு

3. அஞ்சலி ரேவதி போன்று நீண்ட நாட்களுக்கு தமிழ்திரையில் நிலைபெற இப்படம் நல்ல வாய்ப்பை தந்திருக்கிறது. இப்போது இயக்குனர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் சுயமரியாதை உள்ள பல பாத்திரங்களுக்கு மனதில் உருவங்கொடு்ப்பார் (reference). அவர் செய்யவேண்டியது அடுத்த படங்களை அவசர அவசரமாக ஒப்புக்கொள்ளாமல் இருந்தால் போதும்.

4. சண்டையை கட் செய்தது. ஓரு வேலை நான் பார்த்த திரையரங்கின் கைவண்ணமோ ( காஞ்சி சிவஅருணா)

சில கசப்பு வகைகள்..

1. இறுதி காட்சியில் சொல்லும் விபத்து பற்றிய எச்சரிக்கை தகவல்..... படத்தை பார்க்கும் போது இயல்பாக புரிகிறது (உணரமுடிகிறது)...

2 முன்னால் போனா லாரிகாரர் செய்த தவறு... பேருந்தின் அதிவேகமாக மாற்றப்பட்டது

3. சென்னையில் அமுதாவிடம் கொள்ளையிடும் பெண்மணியும், ஆடவர்களும் கருப்பாக எளிய மக்கள் தோற்றத்தில் இருப்பது. காலகாலமாக தமிழ் திரைப்படங்களின் உளவியல் இங்கும் இருப்பது வருத்தற்குரியது

4. அஞ்சலி செவிலியார் பணி செய்வதே அவர் ஜெய்யின் உடலை தானம் செய்ய போதுமானது. இப்படி இருந்திருக்க வேண்டும். ஜெய் தானம் செய்யும் நேரத்தில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டிருக்க வேண்டும். பிறகு செய்து கொள்ளலாம் என்று இருவரும் விட்டுவிட்டார்கள். அதற்குள் விபத்து. அஞ்சலி மனவலியின் ஊடே சிந்தித்து “தன் உடலை தானம் செய்யாத ஜெய்யின் உடலை” பொய் சொல்லி தானம் செய்திருக்கவேண்டும்.

அது அஞ்சலியின் கதாபாத்திரத்தை மட்டுமல்லாமல் அவர் செய்யும் பணியையும் உயர்த்தி இருக்கும். கூடவே நல்ல conclusion னாகவும் இருந்திருக்கும்


மொத்தத்தில் கொடுத்த காசுக்கு பரமதிருப்தி... வாழ்த்துக்கள்