Sunday 7 February 2010

அஜித்தின் அட்டகாசம்

திரைத்துறையினருக்கு குடியிருப்புகள் மற்றும் சில சலுகைகள் வழங்கியதற்காக முதல்வருக்கு நடந்த பாராட்டுவிழாவில் நடிகர் அஜித் சிறுபிள்ளைத்தனமாக பேசியிருக்கிறார்.

“சமீப காலமாக மக்கள் பிரச்சனைகளுக்கு சிலர் ( திரைதுறையை சோ்ந்தவர்கள்) தாங்களாகவே அறிக்கை விடுவதும், ஊர்வலம் போவதுமாக இருக்கிறார்கள். அதில் கலந்து கொள்ளுமாறு மிரட்டுகிறார்கள்” என்று முதலவரிடம் கோல்மூட்டுகிறார்.

“கொஞ்ச நாட்களாக” என்றால் அவர் ஈழப்பிரச்சனையைத்தான் சொல்கிறார். (அதற்கு முன்பு காவிரி நீர் மற்றும் ஒக்கனேக்கல் கூட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு நடத்தப்பட்ட போரட்டங்கள் கர்நாடக திரைத்துறையின் எதர்வினையாகத்தான் நடத்தப்பட்டன. )

ஈழத்தில் கடந்த மே 11 முதல் 18 வரை ஐம்பதாயித்திற்கும் மேற்பட்டோர் கொன்றுகுவிக்கப்பட்ட போது பெரும்பான்மை தமிழர்களே காசு வாங்கிக் கொண்டு காங்கிரசுக்கு ஓட்டு போட்ட போது வெளியாளான அஜித்திடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்.?

மனிதாபிமான அடிப்படையில் கூட எந்த மாநிலமும், வெளிநாடுகளும் தலையிடாத போது அஜித்துக்கு மட்டும் என்ன தலையெழுந்து? ஈழத்தமிழர்கள் அனைவரும் அழித்தொழிக்கப்பட்டாலும் கோடிகோடியாக பணம் கொடுக்கவும், வானுயரத்திற்கு வினயல் வைக்கவும், பாலபிஷேகம் செய்யவும் தமிழ்நாட்டு தமிழர்கள் இருக்கிறார்கள்.

நாம் சொல்ல வருவதெல்லாம் சங்கம் பற்றிய அஜித்தின் அறிவு எப்படிபட்டது என்பதுதான்.

உண்மையில் சங்கம் ஒன்றில் உறுப்பினராக இருப்பவர் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் தனது விருப்பத்திற்கு மாறாக சங்கம் ஒரு முடிவினை எடுக்கும் போது அந்தப் பெருன்பான்மை முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவது என்பது சாதாரண ஆட்டோ ஓட்டுநர் முதல் உயர்பதவிகளில் இருப்பவர் வரைக்கும் அறிந்த ஒன்று.

நடிகர் சங்கம் என்கிற அமைப்பு அஜித் உட்பட பல நடிகர்களுக்கு அவர்கள் தனிப்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்க உதவியிருக்கிறது. அப்போதெல்லாம் அஜித்துக்கு சங்கம் தேவை. கூட்டு முடிவிற்காக ஒருநாள், இரண்டுநாள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்றால் மிரட்டுகிறார்கள் என்று அழுகிறார்.

தமிழனின் பணத்தை கோடிகோடியாக சம்பாதிக்கும் அஜித் இதுவரை தமிழனைவிடுங்கள் தான் சார்ந்திருக்கும் நடிப்பு துறைக்கு என்ன செய்திருக்கிறார். இளையராஜை எதற்கும் வருவதில்லை, ரகுமான் , மணிரத்னம் போன்றோர்கள் வருவதில்லை. அது தவறு என்றாலும் அவர்கள் அனைவரும் தங்கள் சாதனைகள் மூலமாக தமிழகத்திற்கும், தமிழனுக்கும் பெருமை சோ்த்திருக்கிறார்கள்.

அஜித்திற்கு தான் நடித்ததில் அப்படி ஒரு படத்தை - ஒரே ஒரு படத்தை காட்டச்சொல்லுங்கள். தினமும் குடித்துவிட்டு வெள்ளை பன்றி போல பெருத்துவிட்டு, திரையில் அவர் ஆடும் ஆட்டம் சகிக்க முடியவில்லை. உடம்பை குறைக்கவாவது தினசரி நாட்டில் நடைபெறும் ஊர்வலங்களுக்கு போய் வரலாம்.

இவருக்கு எழுந்து நின்று கைதட்டியவர் ரஜினி. இவர் சில நேரம் ஆன்மீகவாதி, பல நேரம் அதிமேதாவி. வீரப்பன் நடிகர் ராஜ்குமாரை கடத்திய போது பழநெடுமாறன் ஐயாவிடம் ஓடிச்சென்று உதவிக்கேட்டவர். தோ்தல் நேரங்களில் இந்த கூட்டணிக்கு வாயிஸ், அந்த கூட்டணிக்கு வாயிஸ் என்பவர். இப்போது கலைக்துறையில் அரசியல் கூடாது என்று சொன்னதற்காக எழுந்து நின்று கைதட்டுகிறார். தமிழன் இளிச்ச வாயன் என்பது இவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஒரு முத்துக்குமார் விளக்கேற்றினால் அதை ஊதி அனைக்க லட்சக்கணக்கான அஜித்குமார்கள், ரஜினிக்குமார்கள் இருக்கிறார்கள்.

சினிமா கவர்ச்சியை பயன்படுத்தி பதவிக்கு வந்த கலைஞருக்கும், ஜெயலலிதாவுக்கும் இனி சினிமாவில் இருந்து யாரும் அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லதே. அதைத்தான் கலைத்துறையில் அரசியல் வேண்டாம் என்று நாசுக்காய் சொல்கிறார். ஏற்கனவே விஜயகாந்த் தங்கள் கல்லா பெட்டியில் பங்கு கேட்பதை பொறுக்முடியவில்லை.

நடிகர் சங்கம் உண்மையில் ஒரு பொதுவான, கட்டுப்பாடான, சுயசார்பு கொண்ட அமைப்பு என்றால் அஜி்த் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கடைசியாக நாம் அஜித்திற்கு சொல்லிக் கொள்வது ஒன்றுதான். தமிழ் நாட்டில் சினிமா நடிகர்களுக்கு தகுதிக்கும், தேவைக்கும், உழைப்பிற்கும், அதிகமாக பணமும் புகழும் கிடைக்கிறது. ஆற்றலுக்கு எதிர் ஆற்றல் உண்டு. கொடுத்தற்கு ஈடாக எதிர் பார்ப்போம். தமிழ்நாட்டில் நடிகனாக இருக்கவேண்டுமானால் அவ்வப்போது பொதுபிரச்சனைகளில் கலந்து கொண்டுதான் ஆகவேண்டும். அதுதான் தமிழ்நாட்டின் இயல்பு. உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் வேறுமாநிலத்திற்குச் சென்று நடியுங்கள்.

நன்றி. வணக்கம்.

2 comments:

  1. தங்களது முதல் கட்டுரைக்கு வாழ்த்துகள் நண்பரே..!! முதல் கட்டுரையே அதிரடியாக உள்ளது. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..!!

    ReplyDelete
  2. Word verification No கொடுங்க.. அப்பத்தான் கமெண்ட் போட மிகவும் எளிதாக இருக்கும். பதிவுகளை திரட்டிகளில் இணையுங்கள். அப்பொழுதுதான் நிறைய பேரை சென்றடையும்.

    ReplyDelete